அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் ஜனநாயக கட்சி வேட்பாளர்

தினமலர்  தினமலர்
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் ஜனநாயக கட்சி வேட்பாளர்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்கும் அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் தேர்வானார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்கிறது. அதில், ஆளும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு ஆரம்பத்தில் கடும் போட்டி ஏற்பட்டது. இதில் ஒருவர் பின் ஒருவராக விலக, முன்னாள் துணை அதிபராக இருந்த ஜோ பிடன் மற்றும் பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த ஏப்ரல் மாதம் பெர்னி சாண்டர்ஸ் இந்த போட்டியில் இருந்து விலகி கொண்டார்.

இந்நிலையில், ஜனநாயக கட்சியின் சார்பில், அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய மாகாண ங்களில் நடந்த பிரைமரி தேர்தலில், இதுவரை 1,991 பிரதிநிதிகளின் ஆதரவை ஜோ பிடன் பெற்றுள்ளார். இன்னும் 8 மாகாணங்கள் 3 பிரதேசங்களில் பிரைமரி தேர்தல் நடைபெற இருந்தாலும், ஜனநாயக கட்சி சார்பில், வேட்பாளராக நிற்பதற்கு தேவையான பிரதிநிதிகளின் ஆதரவை ஜோ பிடன் பெற்றுள்ளார். இதன் மூலம் நவம்பர் மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து, ஜோ பிடன் களமிறங்க உள்ளார்.77 வயதான ஜோ பிடன், 36 ஆண்டுகள் செனட் உறுப்பினராக இருந்துள்ளார். 2009 முதல் 2017 வரை அமெரிக்க துணை அதிபராக பதவி வகித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் பெர்னிசாண்டர்ஸ் போட்டியில் இருந்து விலகிய நிலையில், ஜனநாயக கட்சியின் தலைவர் நிலையில் இருந்து வருகிறார்.

மூலக்கதை