ஜார்ஜ் பிளாய்டுக்கு கனடா பிரதமர் மண்டியிட்டு மவுன அஞ்சலி

தினமலர்  தினமலர்
ஜார்ஜ் பிளாய்டுக்கு கனடா பிரதமர் மண்டியிட்டு மவுன அஞ்சலி

ஒட்டாவா: அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவர் கொலை சம்பவத்தை கண்டித்து கனடாவில் நடந்த போராட்டதில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கலந்து கொண்டு பேரணியாக சென்றார்.

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கடந்த மே 25-ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பித்தவரை போலீஸ் அதிகாரி முட்டி காலால் நெருக்கியதல் மூச்சு திணறி இறந்தார். இதனை கண்டித்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடக்கிறது. சில இடங்களில் வன்முறையும் வெடித்துள்ளது.


இந்நிலையில் அமெரிக்காவில் கருப்பினத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறையை கண்டித்து கனடா தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் திடீரென ட்ரூடோ கலந்து கொண்டு பேரணியாக சென்றார். அவருடன் சோமாலிய வம்சாவளி அமைச்சரான அகமது உசேனும் பேரணியில் பங்கேற்றார். அப்போது ஜார்ஜ் பிளாய்டுக்கு அஞ்சலி செலுத்துவிதமாக 9 நிமிடம் மண்டியிட்டு மவுன அஞ்சலி செலுத்தினார்..

மூலக்கதை