சவூதியிலிருந்து சென்னை புறப்பட்ட பயணிகளுக்கு அன்பான வழியனுப்பு

தினமலர்  தினமலர்
சவூதியிலிருந்து சென்னை புறப்பட்ட பயணிகளுக்கு அன்பான வழியனுப்பு

மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள வந்தே பாரத் சேவையின் சவூதி அரேபியா தம்மாமிலிருந்து சென்னைக்கு செல்லும் முதல் ஏர்இந்தியா விமானம் 165 பயணிகளுடன் இனிதே புறப்பட்டுச்சென்றது. சென்னை பயணிகளை இந்திய சமூக நலப் பணியாளர்கள் வெங்கடேஷ், கணேஷ் , அப்துல் சத்தார், வாசு யாவரும் விமான நிலையத்தில் கோவிட் -19 சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினர்.
ஒரு பயணிக்கு விசா காலாவதியாகிவிட்டதால் அவர் பிரயாணம் செல்ல இயலவில்லை. நம் தமிழ் சமூகத்தின் கூட்டு முயற்சியின் பலன் இது என்றால் அது மிகையல்ல. இதில் 50 க்கும் மேற்பட்டோர் கர்ப்பிணி பெண்கள், 5 பேர் தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஏனையோர் விசா காலாவதி ஆனவர்கள் மற்றும் வெளியேறு (exit) விசா உடையோர்.காலை 11 மணிக்கு தமிழ்நாடு சமூக நல அமைப்பின் செயற்பாட்டாளர்கள் விமானநிலையம் சென்று தமிழ் பயணிகள் அனைவருக்கும் வேண்டிய உதவிகளைச்செய்துஅவர்களை சிறப்பான முறையில் தாயகம் அனுப்பி வைத்தனர். உதவியாககேரள சமூக சேவகர் நாஸ் வக்கம் மற்றும் விமானநிலையத்தில் பணிபுரியும் எமது தமிழ் சமூக சேவகர் கணேஷ் அவர்களும் உறுதுணை யாக இருந்தனர்.
தமிழக அரசு வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இலவசமாக சிறப்பான அரசு தனிமைப்படுத்தல் ஏற்பாடு செய்திருப்பதால் அதனையே உபயோகப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டனர்!
இந்த நேரத்தில் நமது இந்திய அரசு, தமிழ் அரசு மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் அனைவருக்கும் எமது மனமுவந்த நன்றியை தெரியப்படுத்திக்கொள்கிறோம். நம் சகோதர சகோதரிகளின் பயணம் இறையருளால் இனிதே அமைய நாம் அனைவரும் பிராத்தனை புரிவோம். - தமிழ்நாடு சமூக நல அமைப்பு, தம்மாம்! -அப்துல் சத்தார் .

மூலக்கதை