கேரளாவில் வரும் 9-ம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்கள், மால்கள், உணவகங்கள் திறப்பு: முதல்வர் பினராயி விஜயன்

தினகரன்  தினகரன்
கேரளாவில் வரும் 9ம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்கள், மால்கள், உணவகங்கள் திறப்பு: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் அனைத்து வழிபாட்டு தலங்களும் வரும் 9-ம் தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் உள்ள மால்கள், உணவகங்களும் வரும் 9-ம் தேதி திறக்கப்பட்டு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கப்படும். சபரிமலையில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 50 பேர் வரை மட்டும் கோவிலுக்குள் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு வெளியே இருக்கும் ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்களை வரும் 8-ம் தேதி முதல் திறந்துகொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. திரையரங்கம், குழந்தைகள் விளையாடும் இடங்களைத் திறக்க அனுமதியளிக்கவில்லை.கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 4 கட்ட லாக்டவுனை மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை கடைப்பிடித்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் அனைத்து ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், ரெஸ்டாரண்ட்கள் மூடப்பட்டிருந்தன. உணவங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த லாக்டவுன் முடிந்து அதை நீக்கும் முதல் கட்டம் நடைமுறையில் இருக்கிறது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. இந்த சூழலில் வரும் 8-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்களைத் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்நிலையில் கேரளாவில் அனைத்து வழிபாட்டு தலங்களும் வரும் 9-ம் தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் உள்ள மால்கள், உணவகங்களும் வரும் 9-ம் தேதி திறக்கப்பட்டு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கப்படும். சபரிமலையில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 50 பேர் வரை மட்டும் கோவிலுக்குள் இருக்க வேண்டும்.

மூலக்கதை