கொரோனா கோரத்தாண்டவம்,..உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68.44 லட்சத்தை தாண்டியது; பலி 3.98 லட்சமாக உயர்வு...!

தினகரன்  தினகரன்
கொரோனா கோரத்தாண்டவம்,..உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68.44 லட்சத்தை தாண்டியது; பலி 3.98 லட்சமாக உயர்வு...!

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.98 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,44,222 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 3,98,129 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3,335,318 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236,184 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,649 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 113,233 பேர் குணமடைந்தனர்.  * அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 111,390 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,965,708 ஆக அதிகரித்துள்ளது.* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 33,774 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234,531 ஆக உயர்ந்துள்ளது.* பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35,047 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646,006 ஆக அதிகரித்துள்ளது.* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,134 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 288,058 ஆக அதிகரித்துள்ளது.* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,528 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 449,834 ஆக அதிகரித்துள்ளது.* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 29,111 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 153,055 ஆக அதிகரித்துள்ளது.* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 40,261 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 283,311 ஆக உயர்ந்துள்ளது.* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,134 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167,156 ஆக அதிகரித்துள்ளது.* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,566 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58, 907 ஆக அதிகரித்துள்ளது.* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,763 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 185,414 ஆக அதிகரித்துள்ளது.* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6005 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,152 ஆக அதிகரித்துள்ளது.* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,634 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,030 ஆக அதிகரித்துள்ளது.* துருக்கியில் 4,643 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,921 பேரும், கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,703 ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை