அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் போர்ப்ஸ் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்

தினமலர்  தினமலர்
அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் போர்ப்ஸ் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்

புதுடில்லி: உலகில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் குறித்து போர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இடம் பெற்றுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிபரல பத்திரிகையான போர்பஸ், கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் முதல் 2020-ம் ஆண்டு மே வரையில் உலகில் அதிக சம்பளம் பெரும் பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடங்களைில் , 22 வயது கெய்லி ஜென்னர் என்ற டி.வி. நடிகை 590 மில்லியன் டாலருடன் முதலிடத்திலும், இசைக்கலைஞரும், பாப் பாடகருமான கெய்னி வெஸ்ட் 170 மில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்திலும், உள்ளனர்.



மேலும் ரோஜர் பெடரர், கிறிஸ்டினோ ரொனால்டோ, லையனல் மெஸ்சி, நெய்மர், ஹாலிவுட் நடிகர் தவானி ஜான்சன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இதில் இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் 65 மில்லியன் டாலருடன் ( ரூ. 466 கோடி) 52-வது இடத்தில் உள்ளார்.

மூலக்கதை