மத்திய ஆயுத படை கேன்டீன் விவகாரம்; சிஏபிஎஃப் டிஐஜி இடமாற்றம்: உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய ஆயுத படை கேன்டீன் விவகாரம்; சிஏபிஎஃப் டிஐஜி இடமாற்றம்: உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

புதுடெல்லி: மத்திய ஆயுத படை கேன்டீன் விவகாரம் தொடர்பாக சிஏபிஎஃப் டிஐஜி இடமாற்றம் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி பொருட்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு மத்திய ஆயுத போலீஸ் படையின் (சிஏபிஎஃப்) 1,700 கேன்டீன்களில், வௌிநாட்டு தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டது.

கடந்த 1ம் தேதி முதல், இத்திட்டம் அமல்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய ஆயுத போலீஸ் படை கேன்டீன்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் (சிஇஓ), டிஐஜி-யுமான ஆர். எம். மீனா, மே 29ம் தேதியன்று கேன்டீன்களில் விற்கப்படும் பொருட்கள் குறித்த ஒரு பட்டியலை வெளியிட்டார்.



அதில் ஏற்கனவே விற்கப்பட்ட 1,000-க்கும்  மேற்பட்ட உள்நாட்டு தயாரிப்பு பொருட்களின் விபரங்கள் இல்லை. இதனால், பெரும் சர்ச்சை கிளம்பியது.

ஜூன் 1ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், அடுத்த சில மணி நேரங்களில் வாபஸ் பெறப்பட்டது. தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பொருட்கள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  மத்திய ஆயுத போலீஸ் படை கேன்டீன்களின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர். எம். மீனா, அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதாவது, அவரது கேடரான மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு (சிஆர்பிஎப்) திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.



இதுெதாடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், ‘துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி. ஐ. ஜி) மீனா, மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு (சிஆர்பிஎஃப்) திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். சிஆர்பிஎப்-யின் மற்றொரு டிஐஜி ராஜீவ் ரஞ்சன் குமார், கேன்டீன்களின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) உடனடியாக பணியமர்த்தப்படுவார்.

அவர், மூன்று மாத காலம் அப்பணியில் தொடர்வார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை