ஊட்டியில் காயத்துடன் சிக்கிய சிறுத்தை வண்டலூர் பூங்கா கொண்டு செல்ல முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஊட்டியில் காயத்துடன் சிக்கிய சிறுத்தை வண்டலூர் பூங்கா கொண்டு செல்ல முடிவு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து தோடர் மந்து செல்லும் சாலையில் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று மயங்கி கிடந்தது. சிறுத்தையின் பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் நடக்க முடியாமல் தவித்தது.

இதனை கண்ட பூங்கா ஊழியர்கள் மற்றும் ேதாடர் மந்து மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனத்துறையினர் சென்று, சிறுத்தையை மீட்டு ஊட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு ெகாண்டு சென்று கூண்டில் வைத்து சிகிச்சை அளித்தனர்.

கடந்த 20 நாட்களாக சிறுத்தைக்கு நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தொடர் சிகிச்சையின் காரணமாக காயமடைந்த சிறுத்தை தற்போது கூண்டிற்குள் எழுந்து நடக்க துவங்கியுள்ளது. காட்டுமாடு தாக்கியதாலோ அல்லது கீழே விழுந்தோ சிறுத்தையின் பின்னங்காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், எம். ஆர். ஐ.

ஸ்கேன் எடுத்து பார்க்கவும், மேல் சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியில் பூங்காவிற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு, தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு பூங்காவில் பராமரிக்கப்படும்.

அதிகாரிகள் உத்தரவிட்டால் மீண்டும் ஊட்டியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடர்ந்த வனத்தில் சிறுத்தை விடுவிக்கப்படும் என கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

.

மூலக்கதை