தென்தாமரைகுளத்தில் கலைஞர் பிறந்தநாள் விழா: 2000 பேருக்கு ஒரு மாத மளிகை பொருள் விநியோகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தென்தாமரைகுளத்தில் கலைஞர் பிறந்தநாள் விழா: 2000 பேருக்கு ஒரு மாத மளிகை பொருள் விநியோகம்

கன்னியாகுமரி: தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளில் பொ­துமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி உதவி செய்யவேண்டும் என திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து கன்னி யாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 5 பேரூராட்சிகள், ஆறு ஊராட்சிகளிலும் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு என 2000 பேருக்கு அரிசி, காய்கறிகள், மளிகை சாமான்கள் முகக்கவ சங்கள் கிருமி நாசினிகள் என ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து வகை பொருட்களும் வழங்கப்பட்டன.


இதன் துவக்க நிகழ்வாக தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட் பட்ட தென்தாமரைகுளம் ஜங்ஷனில் வைத்து டாக்டர் கலைஞர் கருணாநிதியின் முழுஉருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி துவக்கப்பட்டது.

இந்த நிவாரண பொருட்களை தலைமை செயற்குழு உறுப்பினரும் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான வக்கீல் தாமரைபாரதி பொதுமக்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் புவியூர் காமராஜ் தலைமை தாங்கினார், மாவட்ட திமுக துணை செயலாளர் முத்துசாமி, பேரூர் செயலாளர்கள் பாபு, வைகுண்டபெருமாள். குமரிஸ்டீபன், மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாநில தொண்டரணி துணை செயலாளர் வக்கீல் பாலஜனாதிபதி, பேராசிரியர் மகேஷ் ,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பொன்ஜான்சன், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் ஜோனி மோசஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

.

மூலக்கதை