அமீரக லாட்டரியில் ரூ.24 கோடி வென்ற இந்தியர்

தினமலர்  தினமலர்
அமீரக லாட்டரியில் ரூ.24 கோடி வென்ற இந்தியர்

அபுதாபி: அமீரக லாட்டரியில் பேக்கரி ஊழியராக வேலை பார்க்கும் இந்தியர் ஒருவருக்கு ரூ 24 கோடி பரிசு கிடைத்துள்ளது.


கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் அசைன் முகமது. இவர் அமீரகத்தில் அஜ்மான் நகரில் பேக்கரி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நண்பா்களுடன் சேர்ந்து கூட்டாக லாட்டரி வாங்குவது வழக்கம். அப்போதெல்லாம் இவருக்கு பரிசு எதுவும் விழவில்லை. கடந்த மே 14ம் தேதி தனியாக ஆன்லைனில் 139411 என்ற எண்ணுடைய டிக்கெட்டை வாங்கியுள்ளார். இந்த எண்ணுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இவர் ஒரே நாளில் ரூ 24.6 கோடிக்கு (12 மில்லியன் திர்ஹாம்) அதிபதியாகிவிட்டார்.


இது குறித்து அசைன் முகமது கூறுகையில், 'எனக்கு லாட்டரி பரிசு குறித்து போன் வந்த போது போனில் உங்களுக்கு 12 மில்லியன் திர்ஹாம் பரிசு விழுந்துள்ளது என்றனர். முதலில் நண்பர்கள் என்னை கிண்டல் செய்து விளையாடுகிறார்கள் என்று நினைத்தேன். பின்னர், ஆன்லைன் இணையதளத்தில் தேடிய போது நான் வாங்கிய டிக்கெட்டுக்கு பரிசு விழுந்துள்ளதை அறிந்தேன். பின் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனேன். இவ்வளவு பணத்தை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன் என தெரியவில்லை' என கூறினார். ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அசைன் முகமதுவுக்கு ஆஷிபா என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

மூலக்கதை