சவுதியில் 1,975 பேருக்கு கொரோனா

தினமலர்  தினமலர்
சவுதியில் 1,975 பேருக்கு கொரோனா

ரியாத் : கொரோனா பாதிப்பு அதிகரித்து சவுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 1,975 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 32 பேர் பலியாகினர் என அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்தது.


கொரோனா வைரசின் தாக்கம் சவுதி அரேபியாவில் சற்று அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசும் பல்வேறு கட்டங்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்கிறது. இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரதுறை கூறுகையில், சவுதியில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) மேலும் 1,975 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93,157 ஆக அதிகரித்தது. மேலும் நேற்று 32 பேர் நோய் தொற்றால் பலியாகினர். தொடர்ந்து இதுவரை சவுதியில் 611 பேர் பலியாகினர்.


சவுதியில் ஒரு நாளில் 806 பேர் குணமடைந்தனர். நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 68,965 ஆக உயர்ந்தது. நோய் பாதிக்கப்பட்டவர்களில் ரியாத்தில் 675 பேர், மெக்காவில் 286 பேர், ஜெட்டாவில் 259 பேர், மதீனாவில் 124 பேர் மற்றும் ஹபாப் சாவில் 112 பேர் அடங்குவர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை