ஆரம்ப பள்ளிக்குள் நடந்த கத்தி தாக்குதலில் 39 பேர் காயம்!

தினமலர்  தினமலர்
ஆரம்ப பள்ளிக்குள் நடந்த கத்தி தாக்குதலில் 39 பேர் காயம்!

பீஜிங் : தெற்கு சீனாவில் ஆரம்பப் பள்ளி ஒன்றிற்குள் நுழைந்த காவலாளி, கத்தியால் தாக்குதல் நடத்தியதில் 9 குழந்தைகள் உட்பட 39 பேர் காயமடைந்தனர்.


தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள வாங்ஃபு நகரில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. காலை 8:30 மணியளவில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் மாணவர்கள் ஆஜராகி கலைந்து சென்றனர். அப்போது பள்ளிக்குள் நுழைந்த காவலாளி ஒருவர் எதிர்படுபவர்களை எல்லாம் கத்தியால் தாக்கியபடி சென்றுள்ளார்.இத்தாக்குதலில் 14 குழந்தைகள், பள்ளி தலைமையாசியர் உட்பட 39 பேர் காயமடைந்தனர். இருவரும் பலமாக கத்திக்குத்து விழுந்துள்ளது.


தகவல் அறிந்து 8 ஆம்புலன்ஸ்களில் விரைந்த மருத்துவக் குழுவினர் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்தியவர் 50 வயதான லி சியாமின் என்பது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். அதிருப்தி அடைந்த ஊழியர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களால் சீன பள்ளிகளில் கத்தி தாக்குதல் நடைபெறுவது தொடர் கதையாகியுள்ளது. ஏப்ரல், 2018-ல், ஷாங்சி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே இளைஞர் ஒருவர் நடத்திய கத்தி தாக்குதலில் 9 மாணவர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர் தூக்கிலிடப்பட்டார்.

அதே போல், அக்டோபர், 2018 இல், தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரில் சமையலறை கத்தியுடன் மழலையர் பள்ளிக்குள் நுழைந்த பெண் ஒருவர் 14 குழந்தைகளை குத்தினார். சமீபத்தில் 2019 ஜனவரியில் பெய்ஜிங் பள்ளியில் நடந்த கத்தி தாக்குதலில் 20 குழந்தைகள் காயமடைந்தனர்.

மூலக்கதை