பாக்., பயங்கரவாதிகளின் அடுத்த குறி ஆப்கானிஸ்தான்

தினமலர்  தினமலர்
பாக்., பயங்கரவாதிகளின் அடுத்த குறி ஆப்கானிஸ்தான்

காபூல் : காஷ்மீரைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உள்ள இளைஞர்களை, மதத்தின் பெயரால் துாண்டி, பயங்கரவாத செயல்களில் ஈடுபட பயிற்சி அளிக்கும் திட்டத்தை, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் செயல்படுத்தி வருகின்றன.

நம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, அமெரிக்காவும், தலிபான் அமைப்பும் ஒப்பந்தம் செய்துள்ளன. அதையடுத்து, அங்கு உள்ள இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு ஈர்க்கும் முயற்சியில், பாக்., ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, ஆப்கானிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் கூறியதாவது: பயங்கரவாதத்தின் தொழிற்சாலையான பாகிஸ்தான், காஷ்மீரில் அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதுடன், பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. தற்போது, தலிபான் அமைப்புக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதனால், ஆப்கானிஸ்தான் அமைதியின் பாதைக்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்புகள், தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளை, ஆப்கானிஸ்தானுக்குள் அனுப்பியுள்ளது. அவர்கள், இங்குள்ள இளைஞர்களைத் திரட்டி, மூளை சலவை செய்து, பயங்கரவாத இயக்கத்தில் ஈடுபடச் செய்கின்றனர். அவர்களுக்கு தேவையான பயிற்சி உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

ஐ.எஸ்.ஐ., முன்னாள் அதிகாரியான பிலால் என்கிற ஜர்காவி, 30 லஷ்கர் பயங்கரவாதிகளுடன் நுழைந்துள்ளார். இங்கு உள்ள சிறு சிறு, பயங்கரவாத குழுக்களையும் கவர்ந்திழுக்கும் முயற்சியில் பாக்., ஈடுபட்டு உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை