இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்: மேக்ரான்

தினமலர்  தினமலர்
இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்: மேக்ரான்

புதுடில்லி: அனைவருக்கும், கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து கிடைப்பதில், இந்தியாவின் ஒத்துழைப்பை, பிரான்ஸ் எதிர்பார்ப்பதாக, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.


இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில், பேரழிவை ஏற்படுத்திய, 'அம்பான்' புயலால், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை செய்ய, பிரான்ஸ் அரசு தயாராக உள்ளது.


கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்க, இந்தியாவின் ஒத்துழைப்பை, பிரான்ஸ் எதிர்பார்க்கிறது.இந்த விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை