இலங்கை வீரர்கள் பயிற்சி | ஜூன் 02, 2020

தினமலர்  தினமலர்
இலங்கை வீரர்கள் பயிற்சி | ஜூன் 02, 2020

கொழும்பு: இலங்கை அணி வீரர்கள் பயிற்சியை துவக்கினர்.

கொரோனா காரணமாக இலங்கை அணி வீரர்கள்,கடந்த இரு மாதங்களாகஎவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. வரும் ஜூன் மாதம்இந்திய அணி, இலங்கை மண்ணில் தலா மூன்று ‘டுவென்டி–20’, ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் எனநம்பப்படுகிறது.

இதற்குத் தயாராகும் வகையில்,இலங்கை கிரிக்கெட் அணியின் நுவான் பிரதீப், ஹசரங்கா, குசல் பெரேரா, குணதிலாக 13 முன்னணி வீரர்கள் நேற்று முதல் மைதானத்தில் பயிற்சிகளை துவக்கினர். ஓட்டம் உட்பட உடற்தகுதிக்கான பயிற்சிகளை மட்டும் மேற்கொண்டனர்.

12 நாட்கள் நடக்கும் இப்பயிற்சியில் பங்கேற்கும் வீரர்கள், வீடுகளுக்கு செல்ல முடியாது. ஓட்டலில் யாரையும் சந்திக்கக் கூடாது, வேறு இடங்களுக்கு செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை