தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை கோரி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்; கொரோனா ஒரு பேரிடராக இருக்கும் நிலையில் மது விற்பனை என்பது பேரிடர் மேலாண்மை சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டது. உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யாமல் அவசர அவசரமாக டாஸ்மாக் கடைகளை திறந்தால் மக்கள் கூட்டம் அதிக அளவில் குவிந்து பலருக்கும் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தில் படி நோயை பரப்பும் யாரையும் கைது செய்யலாம் என்ற அடிப்படையில் டாஸ்மாக் பொது மேலாளர் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் பிரிவு 35-ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் சீமான் தாக்கல் செய்த மனுவில் உள்ள கோரிக்கை காலாவதியாகி விட்டதால் வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்த உச்சநீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.

மூலக்கதை