டின்கள், பாத்திரங்கள், ட்ரம்கள் உள்ளிட்டவற்றை தட்டி ஒலி எழுப்புங்கள்; சத்தம் கேட்டால் வெட்டுக்கிளிகள் ஓடி விடும் : உ.பி முதல்வர் அறிவுறுத்தல்!!

தினகரன்  தினகரன்
டின்கள், பாத்திரங்கள், ட்ரம்கள் உள்ளிட்டவற்றை தட்டி ஒலி எழுப்புங்கள்; சத்தம் கேட்டால் வெட்டுக்கிளிகள் ஓடி விடும் : உ.பி முதல்வர் அறிவுறுத்தல்!!

டெல்லி : வட இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் வெட்டுக்கிளிகளை விரட்ட உ.பி முதல்வர் பல்வேறு வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளார். இந்தியாவில் மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் கூட்டமாக படையெடுத்தன. வெளி நாடுகளில் இருந்து வந்த இந்த வெட்டுக்கிளிகள், பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை நாசப்படுத்தி வருகின்றன. ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத பெரும் சேதத்தை வெட்டுக்கிளிகள் ஏற்படுத்தி வருகின்றன.வெட்டுக்கிளிகளை விரட்ட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டார். அதாவது, வெட்டுக்கிளிகளை விரட்ட பறைகள், டின்கள், பாத்திரங்கள், ட்ரம்கள் உள்ளிட்டவற்றை தட்டி ஒலி எழுப்புங்கள். சத்தம் கேட்டால் வெட்டுக்கிளிகள் ஓடி விடும். இதன்மூலம் முடிந்தவரை பயிர்களை காப்பாற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக விவசாயிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பல்வேறு விவசாயிகளும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். ஆனால் இதற்கு முழு பலன் கிடைக்கிறதா என்று சரியாக தெரியவில்லை.

மூலக்கதை