இந்தியாவில் காணப்படும் 198 வகை கொரோனா வைரஸ்கள்; அதிகபட்சமாக குஜராத்தில் 73 வகை கண்டுபிடிப்பு : அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

தினகரன்  தினகரன்
இந்தியாவில் காணப்படும் 198 வகை கொரோனா வைரஸ்கள்; அதிகபட்சமாக குஜராத்தில் 73 வகை கண்டுபிடிப்பு : அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

டெல்லி : இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மரபணுகளை ஆய்வு செய்ததில் 198 வகை கொரோனா வைரஸ்கள் உள்ளதாக இந்திய விலங்கியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்தில் கீழ் இயங்கும் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. இந்நிறுவனத்தில் டி.என்.ஏ வகைபடுத்துதல் பிரிவை சேர்த்த 7 விஞ்ஞானிகள் ,GISAID என்ற உலகளாவிய மரபணு வங்கிக்கு சென்று, மார்ச் முதல் மே இறுதி வரை இந்தியாவிலிருந்து வந்த மரபணுக்களை ஆய்வு செய்தனர். இந்த மரபணு வங்கியின் தரவுத்தளத்தில் 37,000-க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் மரபணுக்கள் இருந்தன, அவற்றில் குறைந்தது 550 இந்தியாவிலிருந்து வந்தவை. இதனை ஆராய்ந்த போது இந்தியாவில் 198 வைரஸ் வகைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.அதாவது 198 முறை இவ்வைரஸ்கள் இந்தியாவில் அல்லது நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு மியூட்டேஷன் அடைந்துள்ளது.டெல்லியில் சுமார் 39 வகைகள் பதிவாகியுள்ளன, குஜராத்தின் அகமதாபாத் மட்டும் 60 வகைகளை பதிவு செய்துள்ளது, காந்திநகரில் 13 காணப்பட்டன. தெலுங்கானாவில் 55 வகைகளும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் தலா 15 வகைகளும் கண்டறிந்துள்ளனர்.இதில் இரண்டு வகைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்று சீனாவின் வுஹானிலிருந்து வந்தது, மற்றொன்று ஐரோப்பிய வகை. அது மட்டுமின்றி ஈரான் மற்றும் துபாயில் தோன்றிய பிற வகைகள் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இந்த 198 வகைகளில் டி614ஜி என்ற மியூட்டேஷன் இந்தியாவில் பொதுவானதாக உள்ளது. இது இந்தியாவில் பரவலான மியூட்டேஷனாக இல்லாவிடினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பரவலாக காணப்படுகிறது. மியூட்டேஷன்கள் வைரஸின் எளிதான அல்லது வேகமான பரவலுக்கு வழிவகுக்காது, நோய் பாதிப்பை குறைவாக்கவோ அல்லது கடுமையாக்கவோ செய்யாது. ஆனால் இது வைரஸின் நடத்தைகளைப் புரிந்துகொள்ளவும் பயனுள்ள தடுப்பூசியை உருவாக்கவும் விஞ்ஞானிகளுக்கு உதவும்.

மூலக்கதை