கொரோனாவால் பலர் வேலை இழப்பதால் மன உளைச்சல்? கேரளாவில் வங்கிக்குள் பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை

தினகரன்  தினகரன்
கொரோனாவால் பலர் வேலை இழப்பதால் மன உளைச்சல்? கேரளாவில் வங்கிக்குள் பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை

பரவூர்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் வங்கிக்குள்ளேயே அதன் பெண் ஊழியர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரவூரை அடுத்த பூதகுளம் என்ற இடத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த சத்தியாவதி என்ற பெண், இந்த வங்கியில் கலக்‌ஷன் பிரிவில் தற்காலிக முகவராக பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம்போல் பணிக்கு வந்த அவர், தரைத்தளத்திற்கு சென்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். முதல் தளத்தில் உள்ள வங்கிக்கு ஓடிய அவர், அங்கேயே உடல் வெந்து உயிரிழந்துள்ளார். தன்னை பணி நிரந்தரம் செய்யவில்லை என்பதால் இறந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். பூதகுளம் என்ற கிராமத்தை சேர்ந்த சத்தியாவதி தன்னை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்துள்ளார். தன்னை பணி நிரந்தரம் செய்யாததால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றார். இதனாலேயே தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கால் பலர் பணியிழப்பை சந்திப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகி வங்கி ஊழியர் சத்தியாவதி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை