கடலூர் எல்லையில் வாகனங்கள் அணிவகுப்பு; இ-பாஸ் இல்லாத தமிழக மக்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்க மறுப்பு: போலீசாருடன் வாக்குவாதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடலூர் எல்லையில் வாகனங்கள் அணிவகுப்பு; இபாஸ் இல்லாத தமிழக மக்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்க மறுப்பு: போலீசாருடன் வாக்குவாதம்

பாகூர்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகப் பகுதியில் இருந்து புதுச்சேரிக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் வைத்துள்ளவர்கள் மட்டுமே, புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டதால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. புதுச்சேரி எல்லையான முள்ளோடையில் நேற்று எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற வாகனங்களை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

இ-பாஸ் வைத்திருந்தவர்களை மட்டுமே புதுச்சேரிக்குள் நுழைய அனுமதி அளித்தனர்.

மற்றவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் பொதுமக்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரின் கெடுபிடி காரணமாக, வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்றன.   கடலூர் ஆல்பேட்டை வரை சென்றதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அரசின் உத்தரவின்படிதான் எங்கள் பணியை செய்கிறோம். இ-பாஸ் உடன் வருபவர்களை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.



பொதுமக்கள் அது தெரியாமல், எங்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர்’ என்றார்.

இதனிடையே கடலூர் எல்லை பகுதியான கங்கனாங்குப்பம் சோதனை சாவடியில், புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற வாகனங்களை, தமிழக போலீசார் தடுத்து நிறுத்தினர்.

.

மூலக்கதை