கொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஹைட்ராக்சி குளோரோகுயின் ‘ஓகே’: உலக சுகாதார அமைப்பு தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஹைட்ராக்சி குளோரோகுயின் ‘ஓகே’: உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீவா: கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை வழங்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள் பயன்படுத்தப்பட்டன.

இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள் சப்ளை செய்யப்பட்டன. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை தான் பயன்படுத்தி வருவதாக தெரிவித்திருந்தார்.

ஆனால், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள் மூலம் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட நோயாளிகள், அந்த மருந்துகளைப் பயன்படுத்தாதவர்களை விட அதிக அளவில் உயிரிழப்பதாக சில ஆய்வுகள் தெரிவித்திருந்தன.

அதனால், உலக சுகாதார அமைப்பு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மூலமான சிகிச்சையை நிறுத்தி வைத்திருக்குமாறு கடந்த மாதம் 26ம் தேதி எச்சரித்திருந்தது.

இந்நிலையில், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா வைரஸ் பாதித்த ேநாயாளிகளுக்கு அளிக்கலாம் என்று, உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியோசஸ் கூறுகையில், ‘கொரோனா இறப்பு தொடர்பான ஆய்வின்  அடிப்படையில், உலக சுகாதார அமைப்பின் தொற்று பாதுகாப்பு கண்காணிப்பு குழு, மீண்டும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

இந்த மருந்தை 35 நாடுகளைச் சேர்ந்த 3,500க்கும் மேற்பட்டவர்களுக்கு அளித்து சோதனை செய்யப்பட்டது’ என்றார்.


.

மூலக்கதை