காந்தி சிலையை விஷமிகள் சேதப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்ட அமெரிக்க தூதர்: இந்தியா கருணையுடன் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவும் வேண்டுகோள்!!

தினகரன்  தினகரன்
காந்தி சிலையை விஷமிகள் சேதப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்ட அமெரிக்க தூதர்: இந்தியா கருணையுடன் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவும் வேண்டுகோள்!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலையை விஷமிகள் சேதப்படுத்தியதற்காக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரியுள்ளார். பத்து ஆண்டுகளில் நிகழ்ந்திராத வன்முறை!!அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் மின்னியாபோலீஸ் நகரத்தில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டபோது, போலீஸ் அதிகாரியால் முழங்காலால் கழுத்து நெரித்து  கொல்லப்பட்டார். ஜார்ஜ் கெஞ்சி கேட்டும் போலீஸ் அதிகாரி தனது காலை எடுக்காதது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஒரு வாரமாக அமெரிக்காவில் 140 நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.போராட்டங்களின்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் வன்முறைகளும், கலவரங்களும் நடந்து வருகின்றன. சுமார் 20 மாகாணங்களில தேசிய பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.காந்தி சிலையை சேதப்படுத்திய விஷமிகள்!!இதற்கிடையே, அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலையை விஷமிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். தகவலறிந்த தூதரக அதிகாரிகள் காந்தி சிலையை  பிளாஸ்டிக் கவரால் மூடி வைத்துள்ளனர். போராட்டக்காரர்கள் தான் சிலையை அவமதிப்பு செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். அமெரிக்காவில் இந்திய தூதரக வளாகத்தில் தேசத்தந்தை  மகாத்மா காந்தியின் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மன்னிப்பு கோரிய அமெரிக்க தூதர்!!இந்த சம்பவத்திற்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.காந்தி சிலை அவமதிப்பு தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், \'இந்திய தூதரகத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்காக அமெரிக்கா சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதனை இந்திய அரசு கருணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்\', இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை