மத்திய அரசின் பாதுகாப்பு செயலருக்கு கொரோனா?.. 35 அதிகாரிகள் வீட்டு ‘தனிமை’

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அரசின் பாதுகாப்பு செயலருக்கு கொரோனா?.. 35 அதிகாரிகள் வீட்டு ‘தனிமை’

புதுடெல்லி: மத்திய அரசின் பாதுகாப்பு செயலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அமைச்சகத்தின் 35 அதிகாரிகள் வீட்டு தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். டெல்லியின் ரைசினா ஹில்ஸில் உள்ள சவுத் பிளாக்கில் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் உள்ளது.   பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், ராணுவத் தலைவர் மற்றும்  கடற்படைத் தலைவர் ஆகியோரின் அலுவலகங்கள் முதல்  தளத்தில் உள்ளன.

இந்நிலையில், பாதுகாப்புச் செயலாளர் அஜய் குமார், நேற்று கொரோனா நோய் தொற்று பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.



அதனையடுத்து அவர் தற்போது வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அலுவலகத்தில் பணிபுரியும் 35 அதிகாரிகள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு செயலாளரின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ கருத்து வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அலுவலகத்துக்கு வரவில்லை.

ஆனால், பாதுகாப்பு செயலாளருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

.

மூலக்கதை