சம்பளம் வருமா? வராதா?; பணிக்கு திரும்பாத ஊழியர்கள் கலக்கம்; ஊரடங்கில் முழு ஊதியம் வழங்க கோரிய அரசாணையை திரும்பப் பெற்றது மத்திய அரசு...!

தினகரன்  தினகரன்
சம்பளம் வருமா? வராதா?; பணிக்கு திரும்பாத ஊழியர்கள் கலக்கம்; ஊரடங்கில் முழு ஊதியம் வழங்க கோரிய அரசாணையை திரும்பப் பெற்றது மத்திய அரசு...!

டெல்லி: பொதுமுடக்க காலத்தில் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசாணையை மத்திய அரசு திரும்பப் பெற்றது. கொரோனா பரவல் காரணமாக முதலில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் மார்ச் 25  முதல் மே 14-ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருந்தது. இதன், காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இருப்பினும் இந்த ஊரடங்கு காலங்களில்  நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமால் முழு ஊதியத்தை அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. ஊழியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என பிரதமர் மோடி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்  விடுத்தார்.இதற்கிடையே, பொதுமுடக்கம் கடந்த 70 நாட்களுக்கு மேலான அமலில் உள்ளதால், ஊழியர்களுக்கு முழு ஊதியம் அளிக்க முடியாது. எனவே, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. ஊரடங்கு காரணமாக தனியார் நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், அதனை காரணம் காட்டி ஊழியர்களுக்கு வாங்கும் சம்பளத்தில் பிடித்தம்  செய்யக் கூடாது என அரசு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 17 வரை மட்டுமே, அதாவது இந்த 54 நாட்களுக்குப் பிறகு அரசாணையானது திரும்பப் பெறப்பட்டு விட்டது. அதன் பின்னர் பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம்  வழங்க வேண்டியது அவசியமில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், போதிய போக்குவரத்து இல்லாத காரணத்தினால் பணிக்கு திரும்ப முடியாமல் வீட்டில் உள்ள ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மூலக்கதை