அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலையை விஷமிகள் அவமதிப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு, 46, சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.


இந்த சூழ்நிலையில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இந்த சிலையை விஷமிகள் சிலர் அவமதிப்பு செய்துள்ளனர். தகவலறிந்த தூதரக அதிகாரிகள் சிலை பிளாஸ்டிக் கவரால் மூடி வைத்துள்ளனர். போராரட்டக்காரர்கள் தான் சிலையை அவமதிப்பு செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

மூலக்கதை