அமைதியாக இருப்பது துரோகம்; நவோமி ஒசாகா போர்க்கொடி

தினமலர்  தினமலர்
அமைதியாக இருப்பது துரோகம்; நவோமி ஒசாகா போர்க்கொடி

டோக்கியோ : ''சில நேரங்களில் அமைதியாக இருப்பது கூட ஒருவகையில் துரோகச் செயல் தான்,'' என ஒசாகா தெரிவித்தார்.

அமெரிக்காவில் போலிஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டார். பல்வேறு விளையாட்டு நட்சத்திரங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விண்டீஸ் கிரிக்கெட் வீரர் கெய்ல்,'கால்பந்தில் மட்டுமல்ல, கிரிக்கெட்டிலும் இனவெறி உள்ளது,' என்றார்.

இதில் முன்னணி டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகாவும் இணைந்துள்ளார். இவரது அம்மா ஜப்பான், அப்பா ஹெய்தியை (கறுப்பர் இனம்) சேர்ந்தவர்கள். இவர் கூறியது: சில நேரங்களில் அமைதியாக இருப்பது கூட ஒருவகையில் துரோகச் செயல் தான். இதுபோன்ற செயல் நமக்கு நடக்கவில்லை என்பதால், மீண்டும் அப்படி நடக்காது என்று அர்த்தம் இல்லை.

அமைதியாக இருக்க முடியாது. கடைகளை சூறையாடுகின்றனர் என்ற செய்தியை படிக்கும் முன், நிராயுதபாணியாக இருந்த கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒருவர் எப்படி கொல்லப்படுகிறார் என்பதை பாருங்கள், பிளாய்டு மரணத்துக்கு நீதி வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை