ஹாங்காங் மக்களை வரவேற்கிறோம்

தினமலர்  தினமலர்
ஹாங்காங் மக்களை வரவேற்கிறோம்

ஹாங்காங்: ஹாங்காங்கில் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பை மீறி தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.

இதையடுத்து ஹாங்காங்கில் பிரிட்டன் குடியுரிமை பாஸ்போர்ட் வைத்துள்ள 3.50 லட்சம் பேரை வரவேற்க தயாராக உள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் இருந்து வருவோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன், 99 ஆண்டு கால ஒப்பந்தம் முடிந்ததை அடுத்து, ஹாங்காங்கை, 1997, ஜூலை,1ல், சீனாவிடம் திரும்ப அளித்தது.சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள போதிலும் ஹாங்காங் சிறப்பு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

மூலக்கதை