குருவாயூர் கோயிலில் இன்று முதல் திருமணங்கள் நடத்தலாம்

தினகரன்  தினகரன்
குருவாயூர் கோயிலில் இன்று முதல் திருமணங்கள் நடத்தலாம்

திருவனந்தபுரம்: குருவாயூர்  கோயிலில் திருமணங்களை நடத்தலாம் எனவும், அதிகபட்சமாக  50 பேர் கலந்து  கொள்ளலாம் எனவும் கேரள முதல்வர் பினராய் விஜயன் ெதரிவித்தார்.    இதையடுத்து  குருவாயூர் ேகாயிலில் திருமணங்களை நடத்த  அனுமதிப்பது தொடர்பான தேவசம்போர்டின் ஆலோசனை கூட்டம்  நேற்று முன்தினம் நடந்தது.  இதில் 4ம் தேதி முதல் திருமணங்களை நடத்த  அனுமதிக்கலாம் என  தீர்மானிக்கப்பட்டது. ஒரு திருமணத்தில் மணமக்கள் உட்பட 10 பேர்   மட்டுமே அனுமதிக்கப்படுவர். கலந்து கொள்பவர்கள் அனைவரும் புகைப்படத்துடன்   கூடிய அடையாள அட்டை, மருத்துவ பரிசோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்.  அதிகாலை  5 மணிமுதல் நண்பகல் 12 வரை திருமணங்களை நடத்தலாம். முன்பதிவு  செய்யாத  திருமணங்களுக்கு அனுமதியில்லை. ஒரு நாள் அதிகபட்சமாக 60 திருமணங்கள் நடத்தலாம்.முதலில் முன்பதிவு   செய்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள  நேரத்தில் மட்டுமே மண்டபத்தில்  அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு திருமணமும்  முடிந்தவுடன் மண்டபம்  கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும்.ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் அன்று  திருமணத்துக்கு  அனுமதியில்லை.

மூலக்கதை