100, 'வென்டிலேட்டர்'கள் அனுப்புகிறது அமெரிக்கா

தினமலர்  தினமலர்
100, வென்டிலேட்டர்கள் அனுப்புகிறது அமெரிக்கா

வாஷிங்டன்; 'அமெரிக்காவிலிருந்து, முதல்கட்டமாக, 100 'வென்டிலேட்டர்'கள் இந்தியாவிற்கு நன்கொடையாக அனுப்பி வைக்கப்படுகின்றன.


அமெரிக்க அதிபர் டிரம்ப், -தொலைபேசி வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடியுடன், நேற்று முன்தினம் பேசினார். அப்போது, அமெரிக்கா வில் நடைபெறவுள்ள, 'ஜி -- 7' நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு, மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

பின், அமெரிக்கா சார்பில், முதல்கட்டமாக, இந்தியா வுக்கு நன்கொடையாக அளிக்கப்படவுள்ள, 100 வென்டிலேட்டர்கள், அடுத்த வாரம், அனுப்பி வைக்கப்பட உள்ளதாக, அவர் உறுதி அளித்தார்.

இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, தன், டுவிட்டர்' பக்கத்தில், நேற்று குறிப்பிட்டுள்ளதாவது:நண்பர் டொனால்டு டிரம்புடன், பல்வேறு விவகாரங்கள் குறித்து, ஆக்கப்பூர்வமான உரையாடல் நடைபெற்றது. ஜி -- 7 நாடுகள் அமைப்பில், இந்தியா உள்ளிட்ட, மேலும் சில நாடுகளை இணைப்பது குறித்து, டிரம்ப், தன் விருப்பத்தை தெரிவித்தார்.


இரு நாடுகளிலும் இருக்கும் கொரோனா பரவல் நிலவரம், இந்தியா -- சீனா எல்லை விவகாரம், உலக சுகாதார நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, விவாதித்தோம். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை