அன்னாசி பழத்தில் வெடிவைத்து கொடுத்தனர்: மனிதாபிமானம் இல்லாத மனிதர்களால் வாய் சிதறி கர்ப்பிணி யானை பரிதாப பலி

தினகரன்  தினகரன்
அன்னாசி பழத்தில் வெடிவைத்து கொடுத்தனர்: மனிதாபிமானம் இல்லாத மனிதர்களால் வாய் சிதறி கர்ப்பிணி யானை பரிதாப பலி

* உலகம் முழுவதும் கடும் கண்டனம்திருவனந்தபுரம்: கர்ப்பிணிகளை பார்த்தாலே பலர் எழுந்து நின்று இடம் கொடுப்பார்கள் அல்லது உதவி செய்வார்கள். காரணம்,  பிரசவம் என்பது மறுஜென்மத்திற்கு சமம். ஆறறிவு படைத்த மனித இனத்திற்கு நாம்இவ்வளவு பரிதாபப்படும்போது, வாய் பேச முடியாத ஐந்தறிவு ஜீவனுக்குஎவ்வளவு உதவி செய்ய வேண்டும்? ஆனால், கேரளாவில் இரக்கமே இல்லாமல் பசிக்காக வந்த கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் வெடிவைத்து ெகாடூரமாக கொன்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் அமைதிப்பள்ளத்தாக்கு உள்ளது. இப்பகுதியில் தேசிய பூங்காவும் உள்ளது. இங்கு ஏராளமான அரிய வன விலங்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி மலப்புரம் நிலம்பூர் வன அதிகாரியான மோகன கிருஷ்ணன் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு காட்டு யானை ஆற்றிற்குள் நின்றுக்கொண்டிருந்தது. அந்த யானையின் நடவடிக்கையை பார்த்தபோது அதன் உடலில் காயம் இருப்பதை மோகன கிருஷ்ணன் உணர்ந்தார்.  அருகில் ெசன்று பார்த்தபோது யானை அடிக்கடி தலையை தண்ணீருக்குள் தாழ்த்தி உயர்த்துவதை பார்த்தார். அப்போதுதான் யானையின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதை அறிந்தார். அந்த பெண் யானைக்கு 15 வயது இருக்கும். இது குறித்து விசாரித்தபோது, இந்த யானை அடிக்கடி ஊருக்குள் வந்து வாழை, கரும்பு உட்பட விவசாய பயிர்களை சாப்பிட்டு செல்லுமாம்.இதனால் கோபமடைந்த அப்பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் ஊருக்குள் வந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடியை மறைத்து வைத்து கெடுத்துள்ளனர். இதை யானை சாப்பிட்டபோது வெடி வெடித்துள்ளது. இதல் வாய் சிதறி பலத்த காயம் அடைந்தது. இதனால் அந்த யானைக்கு பல நாட்களாக சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யானை நாளுக்கு நாள் மெலிந்தது. வாயில் ஏற்பட்ட காயத்தில் ஈக்கள் மொய்ப்பதில் இருந்து தப்பிக்க யானை தண்ணீருக்குள் இறங்கி தலையை தண்ணீருக்குள் தாழ்த்தி நின்றுள்ளது. இதையடுத்து யானையை காப்பாற்ற முடிவு செய்த ேமாகன கிருஷ்ணன் இது குறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.தொடர்ந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு யானையை தண்ணீரில் இருந்து கரையேற்ற முயன்றனர். ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை. தண்ணீரை விட்டு ெவளியே வரமறுத்து நின்ற யானை சிறிது நேரத்தில் இறந்தது. தொடர்ந்து கும்கிகள் உதவியுடன் யானை உடல் கரைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து யானை உடல் வனப்பகுதிக்குள் ெகாண்டு சென்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போதுதான் அது கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது வன அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் யானை எரிக்கப்பட்டது.அன்னாசி பழத்தில் வெடியை வைத்து இரக்கமின்றி யானை கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு உலகம் முழுவதுமிருந்து விலங்குகள் நல ஆர்வலர் களால் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே,இந்த சம்பவம் தொடர்பாக கேட்டறிந்த  கேரள முதல்வர் இதுகுறித்துவிரிவான விசாரணைக்கு உ்த்தர விட்டுள்ளார். தாய்பூமியிலேயே கொடூரம்யானைகள் அதிகம் இருக்கும் இடம் கேரளா. கோயில் விசேஷங்கள் அனைத்திலும் யானைகள் ஊர்வலம் அங்கு பிரசித்தம். அரசு விளம்பரத்தில் கூட யானைகள் அதிகளவில் இடம்பெறும். அப்படிப்பட்ட கேரளாவிலேயே யானைக்கு நடந்த இந்த கொடூரம் சமூக வலைதளங்களில் மிக அதிகளவில் விமர்ச்சிக்கப்படுகிறது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை