கோரன்டைன் பர்த்டே

தினகரன்  தினகரன்
கோரன்டைன் பர்த்டே

பாகிஸ்தானின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் நேற்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடினார். ஊடரங்கு காரணமாக சுமார் 3 மாதங்களாக வீட்டில் இருக்கிறார் அக்ரம். அக்ரமுக்கு சமூக ஊடகமொன்றில் வாழ்த்து தெரிவித்துள்ள அவரது மனைவியும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சமூக சேவகியுமான  ஷனீரா அக்ரம், ‘ஊரடங்கால் சமூகப் பணிகளை ரத்து செய்துவிட்டேன். நண்பர்களை சந்திக்க, நிகழ்ச்சிகளுக்கு என்று எங்கேயும் செல்ல மாட்டேன்.  கட்டாயத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன்.  அந்த தரமான நேரத்தை  உங்களுடன் மட்டுமே செலவிடப் போகிறேன். ஹேப்பி கோரன்டைன் பர்த்டே’ என்று தகவல் பதிந்துள்ளார்.

மூலக்கதை