ட்வீட் கார்னர்...2 காலிலும் ஆபரேஷன்!

தினகரன்  தினகரன்
ட்வீட் கார்னர்...2 காலிலும் ஆபரேஷன்!

இத்தாலி டென்னிஸ் நட்சத்திரம் பேபியோ பாக்னினி. ஏடிபி உலக தரவரிசையில் 11வது இடத்தில் இருக்கும் பாக்னினி கடந்த சில ஆண்டுகளாகவே கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், 2 கணுக்காலிலும் அவருக்கு ஒரே சமயத்தில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ள பாக்னினி, ‘மூன்றரை வருடங்களாக எனது இடது கணுக்காலில் கடுமையான வலி இருந்து வந்தது. கொரோனாவால் கிடைத்த 2 மாத ஓய்வில் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தேன். ஆனால், மீண்டும் பயிற்சியை தொடங்கியபோது இரண்டு காலிலும் வலி ஏற்பட்டு அவதிப்பட்டேன். மருத்துவர்கள் மற்றும் எனது குழுவினரின் ஆலோசனைப்படி தற்போது அறுவைசிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்து வருகிறேன். விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. மீண்டும் களமிறங்கும் நாளுக்காக இனியும் காத்திருக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை