சவுதியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 30 பேர் பலி

தினமலர்  தினமலர்
சவுதியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 30 பேர் பலி

ரியாத் : கொரோனா பாதிப்பு அதிகரித்து சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 2,171 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக ஒரு நாளில் 30 பேர் பலியானதாகவும் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. நோய் பாதிப்புகளை குறைக்க சவுதி அரசு ம் பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரதுறை இன்று தெரிவித்ததாவது : சவுதியில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் புதிதாக 2,171 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91,182 ஆக அதிகரித்தது. சவுதியில் அதிகபட்சமாக ஒரு நாளில் மட்டும் 30 பேர் பலியாகினர். நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 579 ஆக உயர்ந்தது.


தொடர்ந்து, இன்று 2,369 பேர் குணமடைந்தனர். நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 68,159 பேர் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,321 ஆக உள்ளது.

மூலக்கதை