ஓமனில் மேலும் 738 பேருக்கு கொரோனா

தினமலர்  தினமலர்
ஓமனில் மேலும் 738 பேருக்கு கொரோனா

மஸ்கட் : கொரோனா பாதிப்பு அதிகரித்து ஓமனில் ஒரே நாளில் 738 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 8 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஓமனில் நோய் பாதிப்பு அதிகரித்து புதிதாக 738 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 13,538 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்று 8 பேர் பலியானதையொட்டி, மொத்தமாக பலியானவர்கள் 67 பேர் என தெரிவிக்கப்பட்டது.


ஓமனில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 324 பேர் ஓமன் நாட்டையும், மற்ற 414 பேர் பிற நாடுகளையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது. இதுவரை நோய் பாதிப்புகளில் சிகிச்சையால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,845 ஆக உயர்ந்துது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை