ஒரே நாளில் 122 பேர் உயிரிழப்பு; கொரோனா பிடியில் திணறும் மகாராஷ்ட்ரா...பாதிப்பு எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியது

தினகரன்  தினகரன்
ஒரே நாளில் 122 பேர் உயிரிழப்பு; கொரோனா பிடியில் திணறும் மகாராஷ்ட்ரா...பாதிப்பு எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியது

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2560 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74860 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 122 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 2587 -ஆக அதிகரித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,07,615 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24  மணிநேரத்தில் மட்டும் 8909 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 217 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை  5815 பேர் உயிரிழந்த நிலையில், 1,00,303 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 2,287 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,300 ஆக அதிகரித்தது. இந்நிலையில் இன்று 2,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 74,860 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2587 ஆக அதிகரித்துள்ளது. 32,329 பேர் குணமடைந்துள்ளனர். இந்த தகவலை மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

மூலக்கதை