ஜூன் 15 முதல் பயண தடையை விலக்குகிறது ஜெர்மனி

தினமலர்  தினமலர்
ஜூன் 15 முதல் பயண தடையை விலக்குகிறது ஜெர்மனி

ஐதராபாத் : தெலுங்கானா உருவான இந்நாளில், மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு அரசு தன்னை அர்ப்பணிக்கும் என முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

தெலுங்கானா மாநிலம் நேற்று தனது 6 வது வயதை எட்டியது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு 6 ஆண்டாகிறது. தெலுங்கானாவின் துப்பாக்கி பூங்காவில் உள்ள தியாகிகள் நினைவித்தில், மாநில வளர்ச்சிக்காக பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின் பிரகதிபவனில் முதல்வர் சந்திரசேகர ராவ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின் மாநில உருவாக்க தினத்தையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கூறுகையில்,மாநிலம் உருவான நேரங்களில் தெலுங்கானா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத்தின் முழுமையான வளர்ச்சிக்கு டிஆர்எஸ் அரசு தன்னை அர்ப்பணிக்கும். எதிர்பார்த்த வகையில், அதன் வளர்ச்சி பாதை செல்கிறது. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன, மாநிலத்திற்கு முன்னர் தெலுங்கானாவை பாதித்த பிரச்சினைகள் வெற்றிகரமாக தீர்க்கப்படுகின்றன. கல்வி, சுகாதாரம், தொழில்கள், தகவல் தொழில்நுட்பம், நீர்ப்பாசனம், வேளாண்மை மற்றும் பல துறைகளில் நடைபெற்று வரும் முன்னேற்றம் மற்றும் மேம்பாடு குறித்து நான் திருப்தி அடைகிறேன்.

மாநில அரசு உருவான போது விவசாயமும், விவசாயிகளின் வாழ்வும் நெருக்கடியில் இருந்தன. ஆனால் தெலுங்கானாவின் விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு விவசாயம் மேம்பட ரைத்து பந்து மற்றும் ரைத்து பிமா போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நமது டிஆர்எஸ் அரசின் சிறந்த நடவடிக்கைகளால் தெலுங்கானா விவசாயத்தில் முதன்மை மாநிலமாக முன்னேறி வருகிறது. மிஷன் பாகீரதத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கோடை காலங்களில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்புகளிலும் மாநில அரசு மக்களின் நலனிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து பாதிப்புகளின் விகிதத்தை குறைக்க போராகிறது. இவ்வாறு கூறினார். இதற்கிடையில் தெலுங்கானா உருவான தினத்தை பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடினர்.

மூலக்கதை