டெல்லி ரோகிணி நீதிமன்ற மாவட்ட நீதிபதிக்கு கொரோனா: மனைவி, ஊழியர்கள் ‘தனிமை’

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி ரோகிணி நீதிமன்ற மாவட்ட நீதிபதிக்கு கொரோனா: மனைவி, ஊழியர்கள் ‘தனிமை’

புதுடெல்லி: டெல்லி ரோகிணி நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவரது மனைவி மற்றும் ஊழியர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லில் கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்தை தாண்டிய நிலையில், 556 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது ரோகிணி மாவட்ட நீதிமன்ற மாவட்ட நீதிபதிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மகாவீர் சர்மா கூறுகையில், ‘மாவட்ட நீதிபதி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.



இருவரும் தனிமையில் இருக்கின்றனர். அவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று பாதித்த நீதிபதி சனிக்கிழமை நீதிமன்ற வளாகத்திற்குச் சென்றார். அப்போது, மாவட்ட நீதிபதியுடன் தொடர்பு கொண்ட நான்கு நீதிபதிகளுக்கும் நோய்த் தொற்று பரவி இருக்குமோ என்ற அச்சத்தால், அவர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நீதிபதியின் நீதிமன்ற ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அவர்களில் 5க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்’ என்றார்.


.

மூலக்கதை