அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து உருளைக்கிழங்கு நீக்கம்; ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி....பிரகாஷ் ஜவடேகர்

தினகரன்  தினகரன்
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து உருளைக்கிழங்கு நீக்கம்; ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி....பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி: ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் அறிவித்த அறிவுப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைள், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; முதலீடுகளை அதிகரித்து, உற்பத்தியை பெருக்க வழிகாட்டுதல்கள் குழு அமைபக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நாடு முழுவதும் விளைப்பொருட்களை தடையின்றி விற்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாயிகளுக்காக 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். குறிப்பாக, விவசாயிகள் தங்களுடைய விளைப்பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயித்து கொள்ள இது வழிவகுக்கும்.அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அத்தியாவசியப் பொருட்களுக்கான பட்டியலில் இருந்து உருளைக் கிழங்கு நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையை சியாமா பிரசாத் முகர்ஜி அறக்கட்டளை என பெயர்மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைச்சர்கள், துறைகளில் அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழு மற்றும் திட்ட மேம்பாட்டு செல்கள் அமைக்க அரசு ஒப்புதல் அளிக்கிறது. ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மூலக்கதை