அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்

தினகரன்  தினகரன்
அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்

டெல்லி: மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசானது மனுத்தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு தொடர்ச்சியாக நீட் தேர்வு மட்டும் தான் மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வு என்பது உறுதியாகிவிட்டது. இதனையடுத்து இடஒதுக்கீடு தொடர்பான பல்வேறு சிக்கல்களும், பிரச்சனைகளும் எழுந்து வந்தன. குறிப்பாக இளங்கலை மருத்துவ படிப்புக்காக மாநில தொகுப்பிலிருந்து 15% இடமானது மத்திய தொகுப்பிற்கு வழங்கப்படும். அதே போல மருத்துவ மேல் படிப்புக்கு 50% இடங்கள் மத்திய தொகுப்பிற்கு வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்படக்கூடிய இடங்களில் OBC, BC மற்றும் MBC பிரிவினருக்கான இடஒதுக்கீடானது அமல்படுத்த வேண்டும். குறிப்பாக OBC பிரிவினருக்கு மத்திய தொகுப்பில் இருந்து 27% இடத்தை ஒதுக்க வேண்டும். ஆனால் அது இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இருந்து பல்வேறு காட்சிகளை சார்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தல் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதேபோல தமிழக அரசும் தற்போது மனுத்தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில்; தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் மத்திய தொகுப்புக்காக வழங்க கூடிய இடங்களில் 50% இடத்தை OBC, BC மற்றும் MBC பிரிவினருக்கு வழங்க வேண்டும். ஏற்கனவே தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய மருத்துவ கல்லூரிகளில் தமிழக அரசிடம் இருக்கக்கூடிய தொகுப்பிலான இடங்களில் இடஒதுக்கீடு முறையானது முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு அதை செய்யவில்லை. எனவே தமிழக அரசு மத்திய தொகுப்புக்கு அனுப்பக்கூடிய இடங்களில் 50% இடத்தை OBC, BC மற்றும் MBC உள்ளிட்டோருக்கு ஒதுக்க வேண்டும் என்று தற்போது தமிழக அரசானது உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

மூலக்கதை