இந்தியாவிற்கு அடுத்த வாரம் 100 வென்டிலேட்டர்கள்: டிரம்ப்

தினமலர்  தினமலர்
இந்தியாவிற்கு அடுத்த வாரம் 100 வென்டிலேட்டர்கள்: டிரம்ப்

வாஷிங்டன்: இந்தியாவிற்கு அடுத்த வாரம் 100 வென்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என அமெரிக்க அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது .


நேற்று தொலை பேசி வாயிலாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் செப்டம்பரில் நடக்க உள்ள ஜி.7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.இந்நிலையில் கொரோனாவால் பாதிப்பிற்குள்ளாகிய இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும் என டிரம்ப் முன்னர் உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து நேற்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவிற்கு அளித்த வாக்குறுதியின்படி நன்கொடையாக 100 வெண்டிலேட்டர்கள் அடுத்த வாரம் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படும் . இவ்வாறுஅந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை