சார்... சரக்கு சார்! ஒடிசாவில் குடிமகன்கள் குஷி

தினகரன்  தினகரன்
சார்... சரக்கு சார்! ஒடிசாவில் குடிமகன்கள் குஷி

புவனேஸ்வர்: ஒடிசாவில் வீடுகளுக்கே சென்று மதுபானம் சப்ளை செய்வதற்காக சிறப்பு வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குடிமகன்களின் சாபத்தை கொரோனா அதிகமாகவே ெகாட்டிக் கொண்டிருக்கிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளதால் மதுபான பிரியர்கள் தவித்து வருகின்றனர். 2 மாதங்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், ஒடிசாவில் இன்னும் இக்கடைகள் திறக்கப்படவில்லை.  இந்நிலையில், குடிமகன்களின் சோகத்தால் மனமிறங்கி உள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாய்க், கடந்த 24ம் தேதி முதல் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய அனுமதி வழங்கியுள்ளார். இந்நிலையில், மாநில மதுபான கழகத்தின் மூலமாக மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்வதற்கான சிறப்பு வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. இது மதுபான சில்லறை விற்பனையாளர்களையும், நுகர்வோர்களையும் ஒன்றாக இணைக்கும் டிஜிட்டல் தளமாக செயல்படும். கடந்த 31ம் தேதி வரை 1,351 சில்லறை விற்பனையாளர்கள் ஹோம் டெலிவரி செய்து வந்தனர். மேலும், சோமாட்டோ, ஸ்விக்கி ஹிப் பார் மற்றும் துனியா ஆன்லைன் பிரைவேட் லிமிடெட் போன்றவற்றுக்கும் மதுபானம் சப்ளை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு வரை 2.46 லட்சம் பேரிடம் இருந்து ஹோம் டெலிவரி கோரிக்கைகள் பெறப்பட்டு, அதில் 2.42 லட்சம்  பேருக்கு மதுபானம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை