'மைதானத்தில் ரசிகர்கள்'; இது அடுத்த 'லெவல்'

தினமலர்  தினமலர்
மைதானத்தில் ரசிகர்கள்; இது அடுத்த லெவல்

கோபன்ஹேகன் : கொரோனா வைரஸ் விளையாட்டில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. ரசிகர்கள் இல்லாமல் கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. தவிர, இணையதளங்களில் டிக்கெட் வாங்கும் ரசிகர்களின், 'கட் அவுட்' மைதானங்களில் வைக்கப்பட்டன. இதைப் பார்த்து, வீரர்கள் கைதட்டி மகிழ்கின்றனர்.

தற்போது புதிய முயற்சியாக ரசிகர்கள் 'செயலி' ('ஆப்') வழியாக பார்த்து ரசிக்கின்றனர். இதன் படி டென்மார்க்கில் கொரோனாவுக்குப் பின் 'டேனிஷ் சூப்பர்லிகா' கால்பந்து தொடர் துவங்கியது. முதல் போட்டியில் ரேண்டர்ஸ், ஹோப்ரோ அணிகள் மோதின. இப்போட்டி நடந்த மைதானத்தில் ராட்சத ஸ்கிரீன்கள் வைக்கப்பட்டன. 'செயலி' வழியாக ரசிகர்கள் வீட்டில் இருந்த படியே போட்டியை கண்டு களித்தனர்.

இவர்களது மகிழ்ச்சி தருணங்கள் மைதானத்தில் இருந்து ஸ்கிரீனில் காண்பிக்கப்பட்டன. இதனால் ரசிகர்கள் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. கோல் அடித்த போது, ரசிகர்கள் கொண்டாடியதை ராட்சத ஸ்கிரீனில் பார்த்த வீரர்கள் உற்சாகம் அடைந்தனர்.

மூலக்கதை