கொரோனா கோரத்தாண்டவம்,..3.81 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 64.74 லட்சத்தை தாண்டியது

தினகரன்  தினகரன்
கொரோனா கோரத்தாண்டவம்,..3.81 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 64.74 லட்சத்தை தாண்டியது

டெல்லி: டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.81  லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 381,718 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 6,474,075 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,006,831 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 54,551 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 198,706 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,598 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 95,527 பேர் குணமடைந்தனர்.  * தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,706 ஆக அதிகரித்துள்ளது.* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 108,059 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,881,205 ஆக அதிகரித்துள்ளது. * இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 33,530 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233,515 ஆக உயர்ந்துள்ளது. * பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 31,278 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 556,668 ஆக அதிகரித்துள்ளது. * ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,127 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 287,012 ஆக அதிகரித்துள்ளது. * ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,037 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 423,741 ஆக அதிகரித்துள்ளது. * பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,940 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 189,220 ஆக அதிகரித்துள்ளது. * பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 39,369 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 277,985 ஆக உயர்ந்துள்ளது. * ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,942 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 157,562 ஆக அதிகரித்துள்ளது.* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,505 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,615 ஆக அதிகரித்துள்ளது.* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,674 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 184,091 ஆக அதிகரித்துள்ளது.* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,967 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,647 ஆக அதிகரித்துள்ளது.* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,634 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,022 ஆக அதிகரித்துள்ளது.* துருக்கியில் 4,585 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,920 பேரும், சுவீடன் நாட்டில் 4,468 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர். * கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,395 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,658 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,167 ஆக அதிகரித்துள்ளது. * போர்ச்சுகல் நாட்டில் கொரோனாவுக்கு 1,436 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,663 ஆக அதிகரித்துள்ளது. போலந்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,092 ஆக அதிகரித்துள்ளது. ருமேனியாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,288 ஆக உயர்ந்துள்ளது.ஈக்வடார் நாட்டில் கொரோனாவுக்கு 3,438 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் 1,621 பேர் உயிரிழந்துள்ளனர். பெரு நாட்டில் இதுவரை 4,634 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

மூலக்கதை