ஆள் குறைப்பில் மேக்மைடிரிப்

தினமலர்  தினமலர்
ஆள் குறைப்பில் மேக்மைடிரிப்

புதுடில்லி:‘ஆன்லைன்’ பயண நிறுவனமான, மேக்மைடிரிப், 350 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கிஉள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக, இந்த முடிவை எடுத்திருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், பன்னாட்டு பயணம் சம்பந்தமான வணிக பிரிவில் பணியாற்றியவர்கள் என தெரிகிறது.மேக்மைடிரிப் குழுமத்தின் நிர்வாகத் தலைவரும், நிறுவனருமான தீப் கல்ரா மற்றும் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் மாகோவ் ஆகியோர், ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கின்றனர்.

அதில், நெருக்கடியின் தாக்கம் நீண்ட காலமாக இருக்கும் என்றும்; நிலைமை எப்போது சரியாகும் என்பது தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த இரு மாதங்களாக, வணிகத்தை மீட்டெடுப்பது குறித்து அதிகமாக சிந்தித்தோம். அதில் சில பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதும், அவை சரியாவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதும் தெரியவந்தது. அதனால், வேறு வழி இன்றி, ஆட்குறைப்பை மேற்கொள்ள வேண்டியதாகிவிட்டது.இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.

மூலக்கதை