2 மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூரில் பள்ளிகள் திறப்பு

தினமலர்  தினமலர்
2 மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூரில் பள்ளிகள் திறப்பு

சிங்கப்பூர்: கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.


சிங்கப்பூரில் கொரோனாவால் இதுவரை 35,836 பேர் பாதிப்பு அடைந்தனர். 24 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் இதுவரை மொத்தம் 23,715 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கிற்கு பிறகு இரண்டு மாதம் கழித்து சிங்கப்பூரில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆரம்பநிலை பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் ஜூன் 2 முதல் திறக்கப்பட்டன.


பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை சோதிக்கப்படுகிறது. கையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் வசதியும் வகுப்புகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் முககவசம் அணிந்து வரும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மூலக்கதை