ஜப்பான் நகரில் நடந்து கொண்டே மொபைல் பயன்படுத்த தடை

தினமலர்  தினமலர்
ஜப்பான் நகரில் நடந்து கொண்டே மொபைல் பயன்படுத்த தடை

டோக்கியோ: ஜப்பானில் யமடோ நகரில், நடந்து கொண்டே மொபைல் பயன்படுத்த தடை விதிக்க அந்நகர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஜப்பானில் நடந்து கொண்டே மொபைல் பயன்படுத்துவதால், விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டு அதிகரிப்பாலும் விபத்துகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள நகரான யமடோவில், நடந்து கொண்டே மொபைல் பயன்படுத்த தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா, அந்நகர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பாரப்ப்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை