ஆளில்லாமல் காட்சியளிக்கும் உலகப்புகழ் கடற்கரை; புகைப்படங்கள் வைரல்

தினமலர்  தினமலர்
ஆளில்லாமல் காட்சியளிக்கும் உலகப்புகழ் கடற்கரை; புகைப்படங்கள் வைரல்

பிரேசிலியா: பிரேசில் தலைநகர் ரியோ-டி-ஜெனிரோவின் தென் பகுதியில் உள்ளது உலகப் புகழ்பெற்ற கோபகேபனா கடற்கரை. 4 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த கடற்கரை, உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. ஆண்டுதோறும் இங்கு உலகின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர்.

இங்கு இல்லாத பொழுதுபோக்கு அம்சங்களே இல்லை எனலாம். ரியோ ஒலிப்பிக்கின் போது 2016ம் ஆண்டு இங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. இங்குள்ள பீச் பார்பெக்யூக்களில் டேபிள் கிடைக்காமல் பலர் அல்லாடினர். ஸ்விம்மர்கள், டைவர்கள், ஸ்கீயிங், ஸ்கூபா டைவிங் செய்பவர்கள் வரிசைகட்டி நின்றனர். இது தற்போது கொரோனா தாக்கம் காரணமாக வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இந்தியாவில் கோவா போன்று இந்த பீச்சில் விடிய விடிய பார்ட்டி நடைபெறும். விதவிதமான மதுபானங்கள் கிடைக்கும். தற்போது பிரேசிலில் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ள நிலையில் காலை வாக்கிங் செல்ல ஜாகர்கள், நாய்களை வாக்கிங் செல்ல அழைத்து வருபவர்கள் என கூட்டம் குறைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த பீச் காலியாக உள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. எப்போது மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இந்த கடற்கரை காலியாக உள்ளது. அந்நாட்டில் இது வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. பீச்சில் கடை வைத்திருக்கும் பலர் இதனால் பாதிப்படைந்துள்ளனர். லைஃப்கார்டுகள், பீச் காவலர்கள் மட்டும் ஆங்காங்கே காணப்படுகின்றனர்.

மூலக்கதை