ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜப்பானில் நடைபெறுமா?

தினமலர்  தினமலர்
ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜப்பானில் நடைபெறுமா?

டோக்கியோ: வரும் ஜூலை 23ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 8ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை படிப்படியாக அதிகரித்து வருகிறது.


இதனையடுத்து ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படுமா இல்லையா என்ற விவாதம் தற்போது ஜப்பானிய சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெறும் என்ற சூழ்நிலையே ஜப்பானில் நிலவுவதாக பிரதமர் யோஷிஹிடே சுகா தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் திட்டக்குழு ஆய்வு



ஒருவேளை இன்னும் மூன்று மாதங்களில் வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்தால் ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு அப்போதைய சூழலைப் பொறுத்தே இதற்கான முடிவு எடுக்கப்படும் என்று ஜப்பானிய அரசு மற்றும் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன்னதாக ஒலிம்பிக் ஜோதி முக்கிய இடங்களில் வலம்வருவது வழக்கம்.


ஜப்பானின் முக்கிய நகரங்களில் ஒலிம்பிக் ஜோதியை பிரபலங்கள் பலர் ஏந்தி ஓட திட்டமிட்டிருந்த நிலையில் இவ்வாறு செய்தால் பிரபலங்களை காண சமூக இடைவெளியை மறந்து பலர் வீதிகளில் கூடுவர் என்பதால், குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே ஒலிம்பிக் ஜோதி இந்த ஆண்டு வலம்வரும் என்று ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை மாஸ்க் மற்றும் சமூக விலகலுடன் எவ்வாறு நடத்துவது என்று ஒலிம்பிக் திட்டக்குழு ஆராய்ந்து வருகிறது.

மூலக்கதை