பாகிஸ்தானில் சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை

தினமலர்  தினமலர்
பாகிஸ்தானில் சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமூக ஊடகங்களை தற்காலிகமாக முடக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தெஹ்ரீக்-இ-லபய்க் பாகிஸ்தான் என்ற கட்சியை அரசு தடை செய்ததை தொடர்ந்து உள்நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெஹ்ரீக்-இ-லபய்க் பாகிஸ்தான் என்ற கட்சியை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் பாக்., அரசு தடை விதித்தது. மேலும், அக்கட்சியின் தலைவர் சாத் ரிஸ்வியையும் கைது செய்தது. இதனைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வன்முறை போராட்டங்களில் ஈடுப்பட்டனர். இதனால் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக பாக்., உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.


அதன்படி, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இன்று (ஏப்.,16) மதியம் 3 மணி வரை பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்ஆப், யூடியூப், டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்களுக்கு தற்காலிக தடை விதிப்பதாக உத்தரவிட்டது.

மூலக்கதை