திருமணமாகி ஒரு மாதம் நிறைவு அன்பை பரிமாறிய பும்ரா தம்பதி

தினகரன்  தினகரன்
திருமணமாகி ஒரு மாதம் நிறைவு அன்பை பரிமாறிய பும்ரா தம்பதி

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. 27 வயதான பும்ரா கடந்த மாதம் 15ம்தேதி இல்லற வாழ்வில் இணைந்தார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான சஞ்சனா கணேசனை(29). திருமணம் செய்துகொண்டார். சஞ்சனாவின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர். கோவாவில் இவர்கள் திருமணம் நடந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சக வீரர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. திருமணம் முடிந்த 2 வாரங்களில் ஐபிஎல் போட்டிக்காக மனைவியை பிரிந்து பும்ரா சென்னை வந்துவிட்டார்.  சஞ்சனாவும் கிரிக்கெட்டை தொகுத்து வழங்க சென்றுவிட்டார்.இந்நிலையில் நேற்று அவர்கள் திருமணம் முடிந்து ஒருமாதம் நிறைவு பெற்றது. இதனை ஒன்றாக கொண்டாட முடியாத நிலையில் இருவரும் சமூக வலைதளங்கள் வாயிலாக அன்பை பரிமாறிக்கொண்டனர். நேற்று ராஜஸ்தான்-டெல்லி போட்டியை தொகுத்து வழங்கிய சஞ்சனா, முன்னதாக பும்ரா சேர்ந்து கேக் வெட்டிய  படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், தனது கணவனையும் கேக்கையும் “கொஞ்சம் கூடுதல்” மிஸ் செய்கிறேன், என  பதிவிட்டுள்ளார். இதேபோல் மனைவி மோதிரம் அணிவிக்கும் படத்தை பகிர்ந்த பும்ரா, எனது சிறந்த நண்பருடன் திருமணமாகி ஒரு மாதம் நினைவு. ஒரு மாத காதல், வேடிக்கையான நகைச்சுவைகள், நீண்ட உரையாடல்கள் மற்றும் அமைதி. என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை